ஒ.பி.எஸ் ஏமாந்தார்) வென்றார் ஈ.பி.எஸ்! அதிமுக ஆட்சியை இழக்கும், திமுக ஆட்சியை பிடிக்கும்

ஒ.பி.எஸ் ஏமாந்தார்
வென்றார் ஈ.பி.எஸ்!
அதிமுக ஆட்சியை இழக்கும், திமுக ஆட்சியை பிடிக்கும்


அதிமுகவில் அரசியல் போட்டியை விட சாதி மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது என்கின்ற அடையாளத்தை முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பின் மூலம் தெரியவருகிறது. குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளாக அதிமுகவை வசப்படுத்தி வைத்திருந்து தேவர் சமுதாயம் தற்பொழுது அதிகாரத்தை இழந்து கொங்குவேளாளர் சமுதாயத்திடம் ஆட்சியையும் அதிகாரத்தையும் ஒப்படைத்து விட்டு சிறை தண்டனையை அனுபவிப்பதற்காக சசிகலா பெங்களூர் சிறைக்கு சென்றார். அன்று முதல் இன்று வரை அரசியல் அதிகாரம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் சென்று கொண்டு இருக்கிறது. முதல்வர் பதவியை இழந்த ஒ.பன்னீர்செல்வம் எடப்பாடிக்கு எதிராக பலவித முயற்சிகள் மேற்கொண்டார். அவரது ஒரு முயற்சி கூட வெற்றிப்பெறவில்லை.


பிரதமர் மோடி அவர்களின் அறிவுறுத்தலின்படி முதல்வர் எடப்பாடியுடன் கைகோர்த்து துணை முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு தன் ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார். ஆனால் ஓ.பன்னி அவர்களுடன் சென்ற பலடிைரயும் கழற்றிவிட்ட ஓ.பி.எஸ். கட்சியில் இருந்த தனது ஆதரவு நிலை முற்றிலுமாக இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒ.பி.எஸ் தொடர்ந்து கண்காணித்து தன் கட்டுப்பாட்டை மீறி செயல்படாத அளவிற்கு கவனமாக பார்த்துக் கொண்டார். அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் காவல்துறையினரும் ஒ.பி.எஸ் அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்குவதில் சுணக்கம் காட்டினார்கள். இத்தகைய நிலையை சற்றும் எதிர்பார்க்காத ஒ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை இழந்த நிலையில் மீண்டும் தனக்கு அரசியலில் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கே.பி.முனுசாமி, ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ்பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பிறகும் தன் விருப்பம் நிறைவேறாது என்பதை புரிந்துக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியோடு மோதல் போக்கினை கைவிட்டு சமரசம் முயற்சியில் மேற்கொண்டு முதல்வர் வேட்பாளர் என்கின்ற அந்தஸ்தையும் விட்டுக்கொடுத்து எடப்பாடி அவர்களை முதல்வர் வேட்பாளராக 2021 சட்டமன்ற தேர்தலில் முன்னிறுத்தி போட்டியிடுவதாக முடிவு செய்து ஒ.பி.எஸ். அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சின்ன ப்ளாஷ்பிளாக்......


4 ஆண்டுகளுக்கு முன்பு இதே சூழ்நிலையில் இருந்த ஒ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து சசிகலாவை முதல்வராக முன்மொழிந்து தனது மனக்குமறலை வீட்டுக்கு சென்றவர் இரவு 9 மணியளவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு சென்று தனது மனஉளைச்சலுக்கு உள்ள காரணத்தையும், மனகுமுறலுக்கு உள்ள காரணத்தையும் மௌன உத்தம் என்ற பெயரில் செய்தியாளர்கள் முன்பாக போட்டு உடைத்தார். ஆனால் தற்பொழுது தனக்கு ஏற்ப மனஉளைச்சலையும், மனகுமுறலையும் தனது நண்பர்களிடம் சொல்லியும் அது எடுபடாமல் போய்விட்டதே என்ற வருத்தத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சமாதானம் முயற்சியில் ஈடுபட்டு அதன் மூலம் தனக்கு ஏற்பட இருந்த இழப்பை சரிசெய்து கொண்டார் ஒ.பன்னீர்செல்வம்.


தற்பொழுது உள்ள நிலையில் அதிமுக ஆட்சியை இன்னும் 6 மாதங்கள் வழிநடத்துகின்ற பொறுப்பையும், 6 மாதங்களுக்குப் பிறகு நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொள்ளும் விதமாக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டுள்ளார். ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரையும் கட்சியை வழிநடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள 11 நபர்கள் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவிலும் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி இருந்துள்ளது. அமைச்சர் தங்கமணி, அமைச்சர் வேலுமணி, அமைச்சர் காமராஜர், திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்களும் மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம், முன்னாள் அமைச்சர் மோகன், ஆகிய 5 பேர் ஒ.பி.எஸ்.தரப்பிலும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.


கட்சி ஆட்சி இரண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கட்டுப்பாட்டுக்கு சுலபமாக சென்றுவிட்டது என்பது இந்த நியமனங்கள் மூலம் தெளிவாகிறது. மேலும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ஆதரவாக  சிறையில் இருக்கும் சசிகலாவின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது.


ப்ளாஷ்பேக்....


கடந்த 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு ஜானகி தலைமையில் ஓர் அணியும், ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும் என்று பிரிந்து தேர்தலை சந்தித்தது. இரட்டை இலை சின்னத்தை பறிகொடுத்துவிட்டு ஜானகிக்கு புறா சின்னமும், ஜெயலலிதாவிற்கு சேவல் சின்னமும், இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் ஜானகி தலைமையில் ஆன அணிக்கு புறா சின்னமும், ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும் வழங்கியது. அந்த தேர்தலில் ஜானகி அணி படுதோல்வியை சந்தித்தது. ஜெயலலிதா தலைமையில் ஆன அணி 26 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றது. திமுக தலைமையில் ஆன அணி அதிக இடங்களில் வெற்றிப்பெற்று திமுக ஆட்சி அமைத்தது என்பது வரலாறு.


1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேவல் சின்னத்தில் வாளராக தேர்தலில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி சேவல் சின்னத்தில் வெற்றிப்பெற்றார். ஜானகி ணியில் சார்பில் போட்டியிட்ட ஒ.பன்னீர்செல்வம் புறநா சின்னத்தில் ஜானகி அணி சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.


மேலே குறிப்பிட்டவற்றை பார்க்கும் பொழுது சேவல் சின்னமும், புறா சின்னமும் அதிமுகவின் நினைவுக்கு வருகிறது. இந்த நிலை எதிர்வரும் 2021 தேர்தலில் எதிரொலித்தால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் ஒன்றிணைந்து தேர்தலில் பணியாற்றி மீண்டும் அதிமுக ஆட்சி மலர்வதற்கு கடுமையாக உழைப்பாளர்களா? சேவல் புறா என்று ஒருவர் ஒருவரை தாக்கிக் கொண்டு ஆட்சியையும் இழந்து கட்சியையும் பலகீனப்படுத்துவார்களா? என்ற கேள்வி எழுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி திமுக கடந்த 1989 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது போல் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அதிமுக ஆட்சியை பறிக்கொடுக்குமா என்ற கேள்வி அதிமுக தொண்டர்கள் மத்தியிலும், ஒரு சில தலைவர்கள் மத்தியிலும் தீவிரமாக பேசப்படுகிறது.


அதிமுக வேட்பாளர்கள் தேர்வின் போது வெடிக்கும் பிரச்னையால் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பை அதிக அளவில் ஏற்படுத்தி தரும். இதனால் அதிமுக ஆட்சியை இழக்கும்.


- டெல்லிகுருஜி