அடுத்த வாரிசா? அடுத்த ஈபிஎஸ் ஓ.பி.எஸ்.சா? முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன்

அடுத்த வாரிசா? அடுத்த ஈபிஎஸ் ஓ.பி.எஸ்.சா?


முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் (எம்.டி) இருவரும் தமிழக அரசியலில் நிழல் உத்தங்களை நடத்தி வருகிறார்கள். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் நிர்வாக ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் பல்வேறு ஆலோசனைகளை தனக்கு வேண்டியவர்களிடம் பெற்றுக் கொண்டு அந்த ஆலோசனைகளை தனது தந்தையான எடப்பாடி பழனிசாமி மூலம் நிர்வாகத்துக்குள்ளும், கட்சிக்குள்ளும் புகுத்துவதோடு மீண்டும் தனது தந்தை தமிழக முதலமைச்சராக வரவேண்டும் என்று திரைமறைவில் இருந்துக் கொண்டு பல்வேறு வகையில் ஆதரவுகளை திரட்டிக் கொண்டு வருகிறார். அதுமட்டுமல்ல தான் சார்ந்த சமுதாய இளைஞர்களை ஈர்க்கும் விதமாக பல உதவிகளை செய்துக் கொடுத்து சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தன் சமுதாயத்தை சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து தன்னையும் அரசியலில் முன்னிறுத்திக் கொள்வதற்கு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார்.


துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தேனி நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு தன் தந்தைக்கு புகழையும் சேர்த்துள்ளார். இவர் அதிமுகவின் ஆதரவு இருப்பதைவிட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் முழுமையாக பெற்று தனது அரசியல் அடையாளத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் இவருக்கு அரசியல் ஆசை ஏற்பட்டு தன் தந்தை ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பணியாற்றி முன் அனுபவம் பெற்றுள்ளார். இவரும் தனது தந்தை மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்ற கனவோடு தான் சார்ந்த சமுதாயத்தினரை அணி திரட்டுவதில் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை போன்ற மாவட்டங்களில் உள்ள சமுதாய இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.


கூடவே தன்னால் ஆன உதவிகளையும் தான் சார்ந்த சமுதாயத்திற்கு செய்து கொடுப்பதுடன் அவர்கள் விருப்பத்திற்கேற்ப செயல்பட்டு சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஈ.பி.எஸ் மகன் மீதும் ஒ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் இருவரும் சமீபத்தில் வெளிநாட்டிற்கு சென்று வந்திருந்தார்கள். இது இப்பொழுது அதிமுகவினரிடத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயமாகும். இவர்கள் இருவரும் வெளிநாட்டு பயணம் குறித்து மத்திய அரசும் தனது கவனத்தை இவர்கள் பக்கம் திருப்பி இருப்பதாக டெல்லி வட்டார தகவல் தெரிவிக்கின்றது.


இதை பார்க்கும் பொழுது இந்த இருவரும் அடுத்த அதிமுகவின் வாரிசுகளாக வருவார்களா? அல்லது முதல்வர், துணைமுதல்வர் போன்று அதிமுகவை வழிநடத்துவதற்கு ஆசைப்படுகிறார்களா என்பது போக போகத் தான் தெரியும்.


/ சாமி