சசிகலா விடுதலை தள்ளிப்போவது ஏன்?

சசிகலா விடுதலை தள்ளிப்போவது ஏன்?


சசிகலா விடுதலை குறித்து பரபரப்பாக அரசியல் வட்டாரத்திலும், ஊடகங்கள் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது எந்தவிதமான ஆரவாரம் இல்லாமல் பரபரப்பு அடங்கிப்போனது. ஒருவேளை முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்தப் பின் இந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதா? அல்லது எடப்பாடி பழனிசாமி தேர்வு என்பது சசிகலாவின் விருப்பப்படி தான் நடைபெற்றதா என்ற கேள்வி எழுகிறது. பாஜக கட்சியை சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி மற்றும் ஆசீர்வாதம் ஆசாரி போன்றவர்களுடைய ஆருடங்கள் பலிக்காமல் போனது ஏன்? ஒருவேளை தேர்தல் நெருக்கத்தில் மீண்டும் சசிகலா விடுதலை விஷயம் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதற்காக ஊடக வட்டாரங்கள் தற்காலிகமாக பிரச்சனையை தள்ளிப்போட்டதா என்ற கேள்வி எழுகிறது?