வன்னியர்களுக்கு சலுகை காட்டும் திமுக தலைமை

வன்னியர்களுக்கு சலுகை காட்டும் திமுக தலைமை


திமுக தலைவர் கலைஞர் மறைவிற்குப் பிறகு தலைவர் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அவர்கள் வன்னிய வாக்குகளை பொறுமையாக பெறுவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு வன்னியர்கள் அதிகம் வசிக்கும் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய வடமாவட்டத்தில் வன்னியர் வாக்குகளை பெறுவதற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வன்னிய நிர்வாகிகளுக்கு கட்சி பதவிகளில் பணியில் அமர்த்தி வருகிறார். குறிப்பாக அதிமுகவில்  இருந்து லெட்சுமணன், பிஜேபில் இருந்து வேதரத்தினம், மதிமுகவில் இருந்து சபாபதி மோகன், தேமுதிகவில் இருந்து திமுகவை சேர்ந்த ஏ.ஜி.சம்பத் போன்றவர்களுக்கெல்லாம் கட்சி பதவியை வழங்கிய மு.க.ஸ்டாலின் திமுக மிக உயர்ந்த பதவியான இரண்டாம் நிலை பதவி பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களுக்கு வழங்கி வன்னிய சமுதாயத்திற்கு ஒரு மகுடத்தை சூட்டியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இது மட்டும் அல்ல தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்தால் வன்னியர்களுக்கு தனி உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபம் எழுப்பப்படும் என்றும், திமுக சார்பில் வாக்குறுதி வழங்கியிருக்கிறார். தற்பொழுது உள்ள நிலையில் அதிமுகவை அதிக முக்கியத்துவம் திமுகவில் வழங்கப்படுகிறது என்பதற்கு இவைகளெல்லாம் சான்றாக குறிப்பிடலாம்.


இதனால் வன்னியர்கள் வாக்குவங்கி திமுகவுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.


- சாமி