திமுக கூட்டணியில் 15 இடங்கள் காங்கிரஸ் ஏற்குமா?

திமுக கூட்டணியில் 15 இடங்கள் காங்கிரஸ் ஏற்குமா?


திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு 15 இடங்கள் மட்டுமே 2021 சட்டமன்ற தேர்தலில் ஒதுக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். இதனை ஏற்றுக்கொண்டு திமுக கூட்டணியில் தொடர்வதா அல்லது கூட்டணியை விட்டு வெளியேறி தனித்து போட்டியிடுவதா என்கின்ற ஆலோசனை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். ஒருவேளை அகில இந்திய காங்கிரஸ் தலைமை திமுக கூட்டணியில் தான் கண்டிப்பாக இடம் பெறவேண்டும் ஓரிரு இடங்கள் கூடுதலாக கேட்டு பெறவேண்டும் என்று நிபந்தனை விதித்தால் வேறுவழியில்லை என்று கொடுப்பதை வாங்கிக் கொண்டு திமுக கூட்டணியில் தொடர்வதை தவிர வேறுவழியில்லை என்ற நிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதை பா.சிதம்பரம் போன்றோர் உள்பட பல காங்கிரஸ் தலைவர்கள் வழிமொழிந்து வரவேற்பார்கள் என்கிறது டெல்லி வட்டாரம்.