நீட் தேர்வு ரத்து நடைபெறதா ஒன்று! மாணவர்கள் மரணத்தை தடுக்க புதிய வழி

நீட் தேர்வு ரத்து நடைபெறதா ஒன்று!
மாணவர்கள் மரணத்தை தடுக்க புதிய வழி


தமிழக அரசியலில் நீட் தேர்வு ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்ற விஷயமாகவே இருந்து வருகின்றது. நீட் தேர்வுக்கு தீர்வு காணுகின்ற வழி தெரியவில்லை அல்லது முழுமனதுடன் நீட் தேர்வை அரசியல் கட்சிகள் எதிர்க்கவில்லை. இதனால் மாணவர்களின் நிலைப்பாடு இருதலை கொள்ளி எறும்பாக ஊசலாட்டத்தில் திகழ்கிறது. ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் உண்மை நிலையை எடுத்து உரைப்பதற்கு பதிலாக அரசியல் கட்சிகளின் அறிக்கைகளை வெளியிட்டு மாணவ மாணவிகளை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஊழலை ஒழிப்பதற்காகவும் தரமான மாணவர்களை தேர்வு செய்வதற்காகவும் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்பதை தொடர்ந்து வலியுறுத்தும் சில அரசியல் கட்சிகள் அதை எதிர்த்து பேசும் கட்சிகள் கடந்த கால நிகழ்வுகளை எடுத்துச் சொல்லி ஒன்றை ஒன்று குறைகூறுகிறதே தவிர முழுக்க முழுக்க கல்வி என்பது உயர்கல்வி. கல்லூரி ஆனாலும் முழுக்க முழுக்க அது மாநில அரசு பட்டியலில் கொண்டு வரப்படுவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஏன் முனைப்பு காட்டுவதில்லை .


உண்மையிலேயே கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்தில் தமிழக அரசுக்கு அக்கறை இருக்குமானால் நீட் தேர்வை நடத்துகின்ற மாநில அரசே பொறுப்பேற்று மத்திய அரசு தலையீடு இல்லாமல் மருத்துவ மாணவர்களை தேர்வு செய்கின்ற அதிகாரத்தை பெறுவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒருமித்த கருத்தை உருவாக்கி மத்திய அரசுக்கு அனுப்பிவைத்துவிட்டு அதை கிடப்பில் போடும் பொழுது அதனை எதிர்த்து குரல் எழுப்ப மனமில்லாமல் தேவைப்படும் பொழுதெல்லாம் நீட் தேர்வை பற்றி பிரச்சனைகளை எழுப்புவதும் மாணவர்களின் நலனில் அக்கறை இருப்பது போல் பொது வெளியில் தன்னை அக்கறை காட்டமலும் பேசாமல் மௌனம் சாதிப்பதும் ஆண்டுக்கு ஆண்டு ஏற்படும் ஒரு சம்பிரதாய நிகழ்வாகவே போய்க்கொண்டிருக்கிறது. மத்திய அரசும் உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி கட்டாயமாக நீட் தேர்வை நடத்தியாக வேண்டும் என்று மாநிலங்கள் அரசை நிர்பந்தம் செய்கிறது. இதனால் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மருத்துவம் படிக்கும் விரும்பும் மாணவ மாணவிகள் +2 படிப்பில் 1200க்கு 1190 மதிப்பெண்கள் எடுத்தாலும் அத்தகைய மதிப்பெண்கள் பயனற்று போய்விடுகிறது. நீட் தேர்வு மூலம் 720 மார்க் அடிப்படையில் தேர்வு நிர்ணயம் செய்யப்பட்டு 100 - 110 மார்க் வாங்கினாலே தகுதி தேர்ச்சி வந்துவிடுகிறது. அதற்கு கூடுதலாக மார்க் பெறுகிறவர்களுக்கு அரசு இடஒதுக்கீடு கிடைக்கும் என்பதும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் கூட தனியார் மருத்துவ கல்லூரியில் கேட்கின்ற பணத்தை கொடுத்தால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் இந்த நீட் தேர்வு முறை உருவாக்கியுள்ளது. 


மருத்துவ கல்லுரியில் சேர்வதற்கான கட்டண ஊழல்களையும் தடுத்து நிறுத்த முடியாமல் +2 மதிப்பெண் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பை பெற முடியாமலும் தவிக்கின்ற நிலையை மத்திய அரசு உருவாக்கி விட்டது. இத்தகைய சூழலை ஏற்றுக்கொண்ட மாநில அரசுகள் மாணவர்கள் நலனில் அக்கறை இருப்பது போல் எதிர்கட்சிகள் நீட்டுக்கு எதிராக குரல் கொடுப்பதும் எந்த விதத்தில் நியாயம் என்று தெரிகின்றது.


எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பேசவேண்டிய விஷயத்தை சட்டமன்றத்தில் எழுப்புவதும், சட்டமன்றத்தில் பேச வேண்டிய விஷயத்தை நாடாளுமன்றத்தில் பேசாமல் இருப்பதும் எதை காட்டுகின்றது என்றால் அடிப்பதை போல் அடி அழுவதைப் போல் அழுகிறேன் என்பதை போல தங்கள் வாக்கு வங்கியை தக்கவைத்து கொள்வதற்காக பல அரசியல் கட்சிகள் செயல்படுகிறது என்பதை மாணவ, மாணவிகள் புரிந்துக் கொண்டு செயல்பட்டால் அரியலூர் மாவட்டம் இலந்தைக்குழி கிராமத்தைச் சேர்ந்த பத்தொன்பது வயதான விக்னேஷ் 1006 மார்க் பெற்றிருந்தும் நீட் தேர்வு எழுதும் பயிற்சி பெற்றிருந்தும் தெளிவான அறிவிப்பை மாநில அரசு வெளியிடாதிருந்தினால் மன உளைச்சலில் ஏற்பட்டு நம்பிக்கை இழந்து தற்கொலைக்கு சென்று உயிரை மாய்த்துக் கொண்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகின்றது. நீட் தேர்வு அறிமுகப்படுத்திய ஆண்டிலேயே அனிதா என்ற இளம்பெண் இதே நிலை ஏற்பட்டு தீக்குளித்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழகம் முழுவதும் இன்னொரு உயிர் பறிபோகக் கூடாது என்று எந்த அரசியல் கட்சிகள் முழுக்கமிட்டதும் அந்த அரசியல் கட்சிகள் கண்முன்பாகவே இந்த ஆண்டு மாணவன் விக்னேஷ் மரணமும் நிகழ்ந்துள்ளது. இத்தகைய கொடுமை இனிமேல் நடக்கவிடாமல் இருக்கவேண்டும் என்றால் அரசியல் கட்சிகள் உண்மையான ட் தேர்வுக்கு எதிராக பகிரங்கமாக தெளிவுப்படுத்த வேண்டும் அரசியல் ஆதாயத்திற்காக ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று இரட்டை நிலைப்பாட்டை மேற்கொள்ள கூடாது. ஒற்றை கருத்துடன் அரசியல் களத்தில் நின்று மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அது நீட் தேர்வு முறை ரத்து அல்லது நீட் தேர்வு முறை உண்டு என்பதை தெளிவாக்கி குழப்பத்தில் இருந்து மாணவ மாணவிகளை மரணத்தில் இருந்து மீட்க வேண்டும். இதை தவிர்த்து +1 படிப்பு முடித்தவுடன் துவிட்டு ஓராண்டுக்கு நேரடியாகவே மாணவர்கள் படிக்கின்ற அந்தந்த பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சியை மேற்கொள்வதற்கான முயற்சியை தொடரவேண்டும். இதற்காக கல்வி பாடத்திட்டத்தில் முறையான மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.


பன்னிரெண்டு ஆண்டு என்பதை 11 ஆண்டு ஆக குறைத்து 1 ஆண்டு நீட் தேர்வை நடத்தி மாணவர்கள் விரும்புகின்ற 720 மார்க் அடிப்படையில் தேர்வுகளை நடத்தி மாணவர்களுக்கு வாய்ப்புகளை பெற்றுதருவதற்கு மாநில அரசும் எதிர்கட்சிகளும் முயற்சி செய்யவேண்டும் என்று அக்னி மலர்கள் வேண்டுகோள் விடுக்கிறது. இதனால் தெளிவற்ற நிலையில் இருக்கும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் தெளிந்த தெளிவான முறைக்கு மாறுவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்வார்கள். நீட் தேர்வு என்று தனியான பயிற்சி மையங்கள் நடத்த வேண்டிய அவசியமும் ஏற்படாது. நீட் தேர்வு நடத்துவதற்கான பயிற்சி மையங்களும் தேவைப்படாது அதற்கான பலாயிரம் செலவிடவும் தேவையில்லை .


 ஆர்