சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்; மின்துறை அமைச்சர் தங்கமணி ரகசிய ஆலோசனை

அதிமுக அமைச்சர்களான சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், மின்துறை அமைச்சர் தங்கமணி இருவரும் இன்று சென்னை தலைமை செயலகத்தில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு எதிர்வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த ஆலோசனையின் போது உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களும் உடன் இருந்துள்ளார். அதிமுகவும் மீண்டும் ஆட்சியை எப்படியும் தக்கவைத்து கொள்ளவேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக 150 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய வன்னியர் பகுதியில் உள்ள வாக்குகளை பெறுவதற்கு தனி உள் ஒதுக்கீடு ஒன்றே சிறந்த வழி உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் எதிர்காலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சி ஆட்சி இரண்டிலும் முதன்மை பெற்றவராக வரக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. அதே நேரம் சி.வி.சண்முகம் அவர்கள் ஆட்சி, கட்சி இரண்டிலும் முக்கிய இடம் பெறுவதற்கான வாய்ப்பும் வன்னியர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்றவராகவும் விளங்குவார் என்கிறார்கள். ஒ.பி.எஸ். செல்வாக்கை கட்சி ஆட்சி இரண்டிலும் குறைப்பதற்கும் இத்தகைய முயற்சி கைக்குடுக்கும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி கருதுகிறாராம்.