நீதியரசர் கே.எம்.நடராஜன் மறைவு நெஞ்சம் மறப்பதில்லை நினைவுகள் பிரிவதில்லை!

சென்னை உயர்நீதிமன்றம் நீதியரசர் கே.என்.நடராஜன் இன்று அதிகாலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். பணி ஓய்வுக்குப் பிறகு நீண்ட நாட்களுக்கு சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வில் இருந்து வந்தவர் கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர் பிரபலமான வழக்கான தமிழ்நாட்டின் ராபின்உட் என்றழைக்கப்பட்ட மலையூர் மம்மட்டையான் வழக்கை நடத்திய பொழுது மிகவும் பிரபலமாக வழக்கறிஞர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் புகழ்ந்து பேசப்பட்டவர். மறைந்த முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா அம்மா, மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களிடம் நெருங்கி பழகி அன்பை பெற்றவர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த கே.என்.நடராஜன் அவர்கள் தலைசிறந்த குற்றவியல் சிவில் வழக்குகளை நடத்துவதில் கைதேர்ந்தவர். தனது வாத திறமையால் பல வெற்றிகளை அடைந்தவர். இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள் உள்ளனர். பி.டி.லி.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை தலைவராகவும் பணியாற்றியவர். குறிப்பாக இவரது மறைவு என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமான (வன்னியர்) நாட்டுக்கும் வழக்கறிஞர் துறைக்கும் பேரிழப்பாகும். ஏற்றுக்கொண்ட பதவிகளுக்கெல்லாம் பெருமையும் புகழும் சேர்த்தவர். மறைந்த எஸ்.வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் உறவினரும் ஆவார். இவரது நினைவுகள் மறைவதில்லை . நெஞ்சிலிருந்து பிரிவதில்லை . அவரது ஆன்மா சாந்திடைய அக்னிமலர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.


- ஆர்