8 மாதங்களில் திமுக ஆட்சி தட்டிப் பறிக்க தயாராகுங்கள் மு.க.ஸ்டாலின் அரைகூவல்

8 மாதங்களில் திமுக ஆட்சி
தட்டிப் பறிக்க தயாராகுங்கள்
மு.க.ஸ்டாலின் அரைகூவல்


காணொலி காட்சி மூலம் திமுக பொதுக்குழு கூடியது. அதில் மாவட்ட வாரியாக ஆலோசனையில் பங்கேற்ற பொதுக்குழு உறுப்பினர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீர உரையாற்றினார். அதிமுக ஆட்சியை அப்புறப்படுத்தி இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்று அரைகூவல் விடுத்த மு.க.ஸ்டாலின் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். ஆளுங்கட்சியை ஊடகங்கள் அதிகளவில் ஆதரிக்கின்றன. ஆனால் தமிழக ஊடகங்கள் திமுக தும்பல், இருமல் போட்டால் கூட அதை பூத கரமாக்கி மக்கள் மத்தியில் கொண்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றன. தற்போதைய நிலையில் உண்மையில் ஆளுங்கட்சியாக செயல்படுவது உண்மையில் திமுக தான் என்பதை ஊடகங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன் என்றும் தேர்தல் எப்பொழுது வந்தாலும் திமுக தான் வெற்றி பெறப்போகிறது என்றும் வெற்றியை எளிதில் பெற்றுவிட முடியாது போராடி தான் பெறவேண்டும் என்றும் தனது ஆதங்களை வெளிப்படுத்தியுள்ளார்.


ஆளுங்கட்சி ஊழல்களையும், வாக்குறுதிகளையும் பட்டியல் போட்டு ஆங்காங்கே மாவட்ட வாரியாக ஆதரங்களை திரட்டுங்கள் என்று கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளார். குறிப்பாக ஆளுங்கட்சி எதிராக திமுக தனது தாக்குதல்களை தொடங்கிவிட்டது. காணொலி காட்சி மூலம் இதற்கான ஏற்பாட்டை செய்து தேர்தல் பணியை தொடங்குங்கள் என்று ஒரு சமிக்கை வெளிப்படுத்தி உஷாராக செயல்படுங்கள். மத்திய மாநில அரசை எதிர்த்து ஆட்சியை கைப்பற்றுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை என்பதை மனதில் நிறுத்தி கடுமையாக பணியாற்றுங்கள் என்று கட்டளையிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.


பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டார்கள். துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், பொன்முடி, ஆர்.ராஜா ஆகியோர்களும் பங்கேற்றார்கள். 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தயாநிதிமாறன், உதயநிதி, கனிமொழி, போன்றவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களுடன் காணொலி காட்சி மூலம் பேசுவதற்கு வாய்ப்பை பெற்றிருந்தனர்.