2021 கமலஹாசன் போட்டியிடும் தொகுதி

மக்கள் நீதிமய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமலஹாசன் பொதுமக்களோடு நேரடி தொடர்பை ஏற்படுத்தும் விதமாக டீக்கடை தோறும் மக்கள் நீதிமய்யம் கட்சி குறித்து பேசுகின்ற நிலையை ஏற்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான போஸ்டர்களை அச்சடித்து ஒட்டுவதன் மூலம் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை பொதுமக்கள் இடத்தில் நேரடியாக கொண்டு சேர்ப்பதற்கு இணைவோம்! எழுவோம்! என்ற வாசகத்துடன் மிஸ்டு கால் மூலம் 6369877777 (மிஸ்டு கால்) மூலம் உறுப்பினர் சேர்ப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறார். மிஸ்டு கால் மூலம் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு பாஜக கட்சி தான் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த வகையில் நடிகர் கமலஹாசன் அவர்கள் ஒரு புது முயற்சியை மேற்கொண்டு வாக்காளர்களை கவர்வதற்கு புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவரது கட்சி போட்டியிட்டது. ஆனால் கமலஹாசன் போட்டியிடவில்லை. இருந்தாலும் சுமார் 15 வாக்குகள் மக்கள் நீதிமய்யம் வாக்குகள் பெற்றது. இந்த கட்சி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பல இடங்களில் போட்டியிடுவதற்கு முயற்சித்து வருகிறது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் நடிகர் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் அவர்கள் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்தள்ளது. தனது சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடுவாரா அல்லது தான் நிரந்தர வசிப்பிடம் இருக்கும் சென்னை மாவட்டத்தில் போட்டியிடுவாரா அல்லது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டி யிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. வெற்றி தோல்வியோ கமலஹாசன் 2021 தேர்தலில் போட்டியிடுவார். ஆனால் எந்த தொகுதி என்பதை ரகசியமாகவே வைத்துள்ளார். தனது ரசிகர் மன்றங்களுக்கோ அல்லது தனது கட்சியினருக்கோ தெரிந்துக் கொள்ள முடியாத ஒரு ரகசியமாகவே இருந்து வருகிறது.


அதிமுக திமுக கூட்டணி தவிர்த்து மூன்றாவது அணியை உருவாக்கி அணியின் சார்பில் மக்கள் நீதி மய்யம் தேர்தலை சந்திக்கும்.