அறக்கட்டளையில் மீட்கப்பட்ட சொத்துக்கள் ஜி.சந்தானம் ஐஏஎஸ்(ஓய்வு) சொந்த முயற்சியில் செய்த சாதனைகள்!

அறக்கட்டளையில் மீட்கப்பட்ட சொத்துக்கள்
ஜி.சந்தானம் ஐஏஎஸ்(ஓய்வு) சொந்த முயற்சியில் செய்த சாதனைகள்!


சென்னை வேப்பேரியில் 40 ஆண்டுகளாக தனியாரிடம் இருந்த அறக்கட்டளைக்கு சம்பந்தப்பட்ட 5 கிரவுண்டு நிலம் ஆண்டுக்கு ரூ.6000/- வருமானம் தந்ததை 6.8.2018ல் மீட்கப்பட்டு ஆண்டிற்கு ரூ.60,00,000/- லட்சம் வருமானம் கிடைக்க செய்தது.


சென்னை இராயப்பேட்டையில் 20 வருடங்களாக சமூக விரோதிகளிடம் இருந்த 90 கோடி மதிப்புள்ள 12.5 கிரவுண்டு நிலம் 12.3.2010-ல் மீட்கப்பட்டுள்ளது.


சென்னை ராஜாஜி சாலை 2-வது பீச்லைன் ரோடில் உள்ள 8 வருடங்களாக குத்தகை பிரச்சனையில் சிக்கியிருந்த 6000 சதுர நிலம் நீதிமன்ற அனுமதியோடு கட்டிடம் கட்ட ஆரம்பித்துள்ளது. ஆண்டு வருமானம் ரூ.54 லட்சம் கிடைக்கும்.


வேப்பேரியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுமார் ரூ.6 கோடியில் கட்டப்பட்டுள்ளது.


வேப்பேரி மற்றும் ஊவேரியின் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு ரூ.9.6 லட்சம் மின்கார கட்டண செலவு மீதம் செய்யப்பட்டுள்ளது.


அரசு துறைகளிடமிருந்து 10 வருடமாக வசூலாகாத குத்தகை பாக்கிதொகை ரூ.66.87 லட்சம் வசூலிக்கப்பட்டும் ஆண்டுக்குத்தகை டிமாண்டு ரூ.55 லட்சம் அதிகப்பட்டுள்ளது.


வேப்பேரியில் பாலிடெக்னிக் அரசு உதவித்தொகை பெறும் 7 புதிய பணியிடத்தை உருவாக்கி 14 அரசு அலுவலகட்கு பதவி உயர்வு பெற செய்த சாதனை புரிந்தது.


“திறன் மேம்பாட்டு மையம்" தொடங்கி வன்னிய மாணவர்கட்கு உதவிட 90 நாட்கள் பயிற்சியளித்து வேலை பெற்றுதர செய்தது.


வேப்பேரியில் பாலிடெக்னிக் டெக்னாலஜி இன்குபேட்டர் ஒன்று ஆரம்பித்து சுயதொழில் செய்திட வழிவகை செய்தது.


இவ்வாறு பல்வேறு சாதனைகளை புரிந்து தமிழ்நாடு வன்னியகுல ஷத்திரிய பொது அறகட்டளை தலைவராகவும் கூடுதலாக அறங்காவலர் பொறுப்பையும் ஏற்று இரவு பாலென்றும் பாராமல் கடுமையாக உழைத்து சாதனைகளில் புகழ் அடித்தளமாக இருந்த ஜி.சந்தானம் ஐ.ஏ.எஸ்(ஓ) அவர்களையே சாறும்.