ப்ரைம் இன்டியன் ஹாஸ்பிட்டல் டாக்டர் ஆர்.கண்ணன் சாதனை

ப்ரைம் இன்டியன் ஹாஸ்பிட்டல் டாக்டர் ஆர்.கண்ணன் சாதனை


கொரனா தொற்றால் பாதிக்கப்பட்ட 94 வயது மூதாட்டிக்கு உயர்சிகிச்சையின் மூலம் ப்ரைம் இன்டியன் மருத்துவமனை தலைவர் டாக்டர்.ஆர்.கண்ணன் கொரனா தொற்று நோயாளிக்கு சிகிச்சை அளித்து வெற்றிக்கண்டுள்ளார். வயது முதிர்ந்த ஒருவருக்கு கொரனா நோயின் பிடியிலிருந்து சிகிச்சை மூலம் காப்பாற்றி இருப்பது மாநிலத்திலேயே முதன் முறை என்று மருத்துவர்கள் பாராட்டுகிறார்கள். சென்னை வடபழனியை சேர்ந்த 94 வயது நிரம்பிய மூதாட்டி காய்ச்சல் மூச்சு திணறல் அதை தொடர்ந்து அவர் நினைவை இழந்த நிலையில் அரும்பாக்கத்தில் உள்ள ப்ரைம் இன்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையின் போது அவருக்கு 40% மேல் கொரனா தொற்று இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. உடடினயாக குடல் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஆர்.கண்ணன் தலைமையிலான குழுவினர் அந்த மூதாட்டிக்கு உயர்மருத்துவ சிகிச்சை அளித்தனர். அதன் பயனாக மூதாட்டி கொரனா தொற்றிலிருந்து விடுபட்டு பூரண குணமடைந்துள்ளார். இது மருத்துவ உலகில் பாராட்டையும் வாழ்த்துக்களையும் டாக்டர் கண்ணன் அவர்களுக்கு பெற்று தந்துள்ளது. மரணத்தின் பிடியில் சிக்க வேண்டிய 94 வயது மூதாட்டியை கொரனா பிடியில் இருந்து காப்பாற்றி மறுவாழ்வு அளித்த மருத்துவர் ஆர்.கண்ணன் அவர்களை மருத்துவ உலகமும் பாராட்டி மகிழ்வதை போன்று “அக்னி மலர்கள்” பாராட்டி மகிழ்கிறது.


இதுபோன்ற மிக மோசமான ஒரு நிலையை நோயாளிகளை காப்பாற்ற வேண்டுமென்று தன் உயிரையும் துச்சமென கருதி மருத்துவ சேவையில் ஈடுபட்டு நோயின் தன்மையை கண்டறிந்து கொரனாவை விரட்டி அடித்து 94 வயது மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவினரையும் பாராட்டுகிறோம். ப்ரைம் இன்டியன் மருத்துவமனை தலைவர் டாக்டர் ஆர். கண்ணன் மற்றும் அவரது மருத்துவ குழுவினரை வாசகர்களும் பாராட்டலாம், தமிழக அரசு பாராட்டலாம்


வாட்ஸ்அப், மெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம்.


Mail ID : drkrgastro@gmail.com Cell : 9444871816, 044- 23639999