ஒரு சொல் கேளீர் ஊடகங்களே!

ஒரு சொல் கேளீர் ஊடகங்களே!


ஊழல் அரசியல்வாதிகளையும் ஊழல் ஆட்சியையும் அடையாளப்படுத்திய ஊடகங்களும் பத்திரிகைகளும் ஊழலற்ற அரசியல் வாதிகளையும் நல் ஆட்சி நடத்துபவர்களையும், ஏன் அடையாளப் படுத்தவில்லை. ஏன் அவர்களை பற்றிய பிரபலப்படுத்தவில்லை. ஒரு ஊழல்வாதியை ஒரு குற்றவாளியை உயரத்தில் தூக்கிப் பிடித்து விவாதம் செய்யும் நீங்கள் விலைமதிப்பற்ற ஒரு தியாகத்தையும், தியாகம் செய்த அந்த தியாகியைப் பற்றி நீங்கள் அடையாளப்படுத்தி விவாதம் நடத்துவதில்லையே ஏன்? தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 60 ஆண்டு காலமாக சீர்திருத்தவாதி என்றால் அது ஈ.வெ.ராமசாமி (பெரியார்), அரசியல்வாதி என்றால் சி.என்.அண்ணாதுரை (அண்ணா ), காமராஜர் (பெருந்தலைவர்), மு.கருணாநிதி (கலைஞர்), எம்.ஜி.ராமச்சந்திரன் (புரட்சித் தலைவர்), ஜானகி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இப்படி இவர்களை தவிர சிறந்த அரசியல்வாதி தமிழகத்தில் எவரு எவரும் இதுவரை ஊடகங்கள், பத்திரிகைகள் ஒருவரை கூட உயர்த்திப் பிடிக்கவில்லை . காரணம் என்ன? அறிவில் சிறந்த மெத்தப் படித்த பல தமிழக அரசியல் அமைச்சர்களாகவும், நல்ல இளைஞர்களாகவும், தமிழ் ஆங்கிலம் உட்பட பல மொழிகள் பேசுபவர்கள் நல்ல இளைஞர்கள், மாணவர்கள், ஆளும் திறன்பெற்ற பெண்கள் இப்படி பலவிதமான நபர்கள் தமிழ்நாட்டில் இருந்தபோதும், இருக்கும் போதும் மீண்டும், மீண்டும் ஆட்சியில் இருந்த ஆட்சியை இழந்த, ஆட்சியில் இருக்கும் ஒரு இயக்கத்தைப் பற்றியும் அந்த இயக்கத்தின் குறிப்பிட்ட நபர்களை பற்றியும் மட்டுமே தூக்கி பிடிப்பதும் மட்டுமே அவர்களது செயலை பட்டித் தொட்டிகளிலெல்லாம் கொண்டு சேர்ப்பதும், சில ஊழல்வாதிகளை அடையாளப்படுத்துவதும் ஊடகங்களின் தொடர்கதையாகவே உள்ளது.


தமிழ் மொழியை மட்டுமே முன்னிலைப்படுத்தி திராவிட இயக்கங்கள் மொழிக்கு மாற்றாக ஒரு வளர்ச்சியை தமிழர்கள் முன்னால் கொண்டுவந்து நிறுத்தாமல் கடந்த 60 ஆண்டு காலமாக பயணித்து கொண்டு இருக்கும் தமிழக அரசியலில் ஒரு மாற்று அரசியலை அடையாளப்படுத்துவதும் ஊழல்வாதிகளை பொதுமக்கள் முன்னால் நிறுத்தி மக்கள் சார்பாக கேள்வி எழுப்புவதும் நல்ல மனிதர்களை ஆதாரிக்க வேண்டுமென்று அத்தகைய மனிதர்களை மக்கள் முன் நிறுத்துவதும் ஊடகம், பத்திரிகையாளர்களின் கடமை என மறுக்கிறார்கள். தொடர்ந்து இந்தியை திணிக்காதே தமிழ், தமிழ் இது பெரியார் மண் என்று சொல்லி தமிழர்களுடைய வளர்ச்சியை நல்வழி பயணத்தையும், ஏன் குறைத்து மதிப்பிடுகிறிர்கள். மொழியால் ஆட்சியை கைப்பற்றிய திராவிட கட்சிகள் ஏன் மாற்றி யோசிக்க கூடாது. ஆட்சி மாற்றத்தை மட்டுமே ஏன் விரும்ப வேண்டும். ஆட்சியை கைப்பற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துவது ஏன்? தேசிய நீரோட்டமும், தொலைநோக்கு பார்வையும் தமிழர்களுக்கு ஏற்பட கூடாதா? மாநில சிந்தனையுடன் மக்கள் வளர்ச்சிக்காக சிந்திப்போம் என்று எப்போது நீங்கள் முடிவெடுக்கப் போகிறிர்கள். ஊடகம் பத்திரிகைகளின் வழிகாட்டுதல் அவசியம் தேவைப்படும் காலம் இது.


சிந்திப்போம்! செயல்படுவோம்!!


மக்களுக்காக பேசுகிறோம்! மக்களோடு பேசுகிறோம்!!


உங்களில் ஒருவன்!


- சுவாமி பொய்யானந்தா