புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து முதல்வர் நாராயணசாமி பதவி பறிக்கப்படுமா?

புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து முதல்வர் நாராயணசாமி பதவி பறிக்கப்படுமா? புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சமீபத்தில் தனது தொகுதியான நெல்லித்தோப்பு தொகுதிக்குள் நலதிட்ட வழங்குவதற்கு மக்கள் குறைகள் கேட்பதற்கும் சென்ற போது தொகுதி மக்களால் விரட்டி அடிக்கப்பட்டார் என்ற செய்தி வலைதளங்களில் வைரலாகி புதுச்சேரி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமச்சிவாயம் முதல்வர் வேட்பாளர் என்று தேர்தலில் விளம்பரப்படுத்தி வாக்குகளை பெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் சட்டமன்ற உறுப்பினர் இல்லாத தேர்தலில் போட்டி யிட விரும்பாத ஒதுங்கியிருந்த நாராயணசாமி அவர்கள் முதல்வராக டெல்லி மேலிடத்தால் அறிவிக்கப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை நாராயணசாமியால் ஆட்சியை சுமூகமாக நடத்தி செல்ல இயலவில்லை. அரசு ஊழியர்களுக்கு ஒப்பந்த ஊழியர்களுக்கும் சரியாக மாத சம்பளங்கள் கூட வழங்க முடியாத நிலையில் மிக கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து கொண்டிருக்கும் மாநில அரசு துணை நிலை ஆளுநர் கிரேண்பேடி அவருக்கும் முதல்வர் நாராயணசாமி அவருக்கும் அரசியல் ரீதியாகவும் ஒத்துவரவில்லை . அரசை வழிநடத்துவதிலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை .


முதல்வரின் பரிந்துரைக்கெல்லாம் ஆளுநர் முட்டுகட்டை போடுகிறார் என்று முதல்வர் பகிரங்கமாக பேசுவதும் வரம்பும் மீறி செயல்படுகிறார் முதல்வர் என்று ஆளுநர் அவர்களும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகிறார்கள். இதனால் பல நேரங்களில் புதுச்சேரி மாநில அரசு நிர்வாகம் தம்பித்து போய் செயலற்று முரண்பாடானா நிலைக்கு தள்ளப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் அடிக்கடி எழுகிறது. எதிர்கட்சி தலைவர் பொறுப்பில் இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான என்.ரங்கசாமி அவர்களும் முதல்வர் நாராயணசாமி செயல்களை கண்டித்து எதிர்த்து முறையாக செயல்பாடாததினால் திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழாமல் தொடர்ந்து நீடிக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையிலும் புதுச்சேரி மக்களுக்கு காங்கிரஸ் ஆட்சி கொடுத்த வாக்குறுதிகளையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு முதல்வர் நாராயணசாமி அவர்கள் ஆளாகியுள்ளார். இதன் எதிரொலியாக தான் கடந்த வாரம் நெல்லித்தோப்பு தொகுதிக்கு முதல்வர் நாராயணசாமி சென்ற போது ஊர் மக்கள் ஒன்று கூடி; “நாராயணசாமிக்கு எதிராக ஒழிக என கோஷம் எழுப்பி” அவரது காரை முற்றுகையிட்டு சாலை மறியல் செய்து போராட்டம் நடத்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்ததினால் காவல் துறையினராலும் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. இதனால் முதல்வர் விரட்டி அடிக்கப்பட்டு விரைந்து சென்றுவிட்டார். பாபு சட்டமன்ற உறுப்பினர் தனவேல் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்ற செய்தியும் அதற்கு முதல்வர் நாராயணசாமி தான் காரணம் என்பதும் நாராயணசாமியை முற்றுகையிடுவதற்கு காரணமாக அமைந்து விட்டது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை எவ்வாறு பதவி நீக்கம் செய்யமுடியும் என்ற கேள்வியும் புதுச்சேரி மக்கள் மனதில் ஆழமாக எழுகிறது. தனவேல் விஷயத்தில் அரசு கொரடாவின் புகாரும் ஆனந்தராமன் அதன் மீது சபாநாயகர் சிவகொழுந்து எடுத்த நடவடிக்கையும் இன்று நீதிமன்றம் வரை சென்று சபாநாயகருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகின்ற அளவிற்கு தகுதி நீக்க வழக்கு புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு இடியாப்ப சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற பொதுதேர்தல் வருவதற்கு இன்னும் ஓராண்டு காலம் இருப்பதால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பாகூர் தொகுதி சட்டமன்ற தனவேல் அவர்களின் பதவி நீக்கம் அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை என்பதால் வரும் தேர்தலில் 2021 வரும் பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிக பெரிய அளவில் தோல்வி அடையும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் பார்வையாளர்களும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆருடம் கூறுகிறார்கள். மேலும் காங்கிரஸில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நான்கு, ஐந்து பேர் நீர் பூத்த நெருப்பாக இருந்து கொண்டு அடுத்து வரும் தேர்தலில் அணி மாறி என்ஆர் காங்கிரஸ் உடன் கைகோர்த்து தேர்தலை சந்திக்கவும் திட்டமிட்டு உள்ளதாக முணுமுணுக்கிறார்கள்.