திமுகவின் தேர்தல் வியூகம் ஆட்சியை பிடிக்குமா?

தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்கின்ற அதி பயங்களை திட்டத்துடன் களத்தில் திராவிட முன்னேற்ற கழகம் வட்டமிடுகிறது. இதற்கு துணையாக அரசியல் ஆலோசகர்களும் தேர்தல் கருத்து கணிப்பாளர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் என்பவரிடம் ஒப்பந்தம் போட்டு உள்ளது. கடந்த ஓராண்டு காலமாக தமிழ்நாட்டில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் சார்பில் கருத்து கணிப்புகளை எடுத்து வருகிறது. இந்த கணிப்பில் திமுகவின் செல்வாக்கு கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் உயர்ந்துள்ளதாக முதல் கட்ட தகவல் அறிக்கையில் பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த தகவல் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மிகப் பெரிய அளவில் நம்பிக்கையை தந்தள்ளது. தற்பொழுது இரண்டாம் கட்ட சர்வேயை நடத்தி வருகின்ற நிலையில் 150 தொகுதிகளை அடையாளப்படுத்தி அந்த தொகுதியின் வெற்றி வாய்ப்பை உறுதிபடுத்துகின்ற வகையில் சாதக பாதகங்களை ஆராய்ந்து (+ -) வெற்றிக்கான தேவைகளை கண்டறிந்து வாக்காளர்களை எப்படியெல்லாம் ஒருங்கிணைக்கலாம் என்கின்ற வேலையை முழு வீச்சில் நடத்தி வருகிறது பிரசாந்த் கிஷோரின் டீம். இந்த டீம் திமுகழகத்தில் உள்ளவர்களை பற்றியும் பொதுவான தொகுதிக்குள் மக்கள் செல்வாக்கை பற்றியும் மாற்று கட்சியினரின் செல்வாக்கு என்ன என்பது குறித்தும், மிக துல்லியமாக கணக்கெடுத்து வருவதுடன் சாதிய அமைப்புகளில் கட்டமைப்பின் அளவு கோல்களையும் கணக்கீட்டு வருகிறது.


கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஒரு சதவித வாக்குகளின் திமுக அதன் கூட்டணி கட்சியும் ஆட்சியை பறிக்கொடுத்தது அதிமுகவிடம் இந்த முறை அத்தகைய சூழ்நிலை ஏற்படாமல் இருக்க 10 சதவித வாக்குகள் கூடுதலாக பெறுவதற்கு மெகா திட்டம் ஒன்றை தீட்டி செயல்படுத்துகிறது. அந்த திட்டத்தை மிக துல்லியமாக நிறைவேற்றுகின்ற பொறுப்பை தான் பிரசாந்த் கிஷோர் குழுவினர் தமிழகத்தில் செயல்படுத்துவதற்கு முயற்சித்து வருகிறார்கள். இந்த முயற்சி வெற்றிப்பெற்றால் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தமிழ்நாட்டில் கட்டாயம் அமைக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார் பிரசாந்த்கிஷோர். ஒருவேளை இந்த திட்டத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு வாக்குகள் எந்த வகையிலும் சிதறிவிட கூடாது என்பதற்கான முன்னேச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது திராவிட முன்னேற்ற கழகம்.


2021 தேர்தலில் வெற்றி வாய்ப்பை அடைவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுத்துவரும் திமுக கழகத்திற்கு மக்கள் மத்தியில் உயர்ந்து வரும் செல்வாக்கை குறைக்கின்ற முயற்சியிலும் ஆளும்கட்சியாக இருக்கின்ற அதிமுக பல்வேறு நலதிட்டங்களை அறிவித்தும் தமிழ்நாட்டின் மக்களின் வாக்கு வங்கியை தக்கவைத்து கொள்கின்ற முயற்சி ஈடுபடுகிறது. மத ரீதியான பல பிரச்சனைகளை கிளப்பி திராவிட முன்னேற்ற கழக வளர்ச்சியை தடுப்பதற்கான முயற்சிகளையும், சில ஊடகங்களும் கருத்துகளை வெளியிடுவதினால் திமுகவின் இமேஜ் மற்றும் அதன் வாக்கு வங்கி குறைப்பதற்கான நடவடிக்கைகளும் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக திமுக கழகத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி தந்தை மகன் மரணம் மிகப் பெரிய அளவில் திமுகவின் இமேஜை உயர்த்தி உள்ளபோது என்ற போதிலும் கறுப்பர் கூட்டம் என்ற யூடிப் செய்தியால் திமுகவின் வாக்கு வங்கி சற்று சரிவை நோக்கி செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.


ஆக மொத்தத்தில் திமுகவின் மெகா திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சியை எப்படியாவது பிடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதினால் 190 இடங்களில் திமுக உதய சூரியன் சின்னத்திலும் 44 தொகுதிகளை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமை கட்சிகளுக்கும் ஒதுக்குவதாக தற்போது உத்தேசி உள்ளதாக தெரிகிறது. இதன்படி பார்த்தால் தற்போதுள்ள தோழமை கட்சிகள் ஒருசில கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறலாம். இன்னும் சில கட்சிகள் புதிதாக கூட்டணியில் இடம் பெறலாம் என்கின்ற தகவல்கள் கசிந்துள்ளது. தற்போது இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு கூரியதாகவே பார்க்கப்படுகிறது.


/ெடல்லி குருஜி