வாழ்க்கை முடங்கிப் போச்சு! வாழ்வாதாரம் எங்கோ போச்சு!! வாழ்க்கை முடங்கிப் போச்சு! வாழ்வாதாரம் எங்கோ போச்சு!! ஆறுதல் தரும் இந்த நம்பிக்கை வார்த்தைகள்! மனிதன் வாழ்வுக்கும் உயிர் வாழ்வதற்கும் உத்தரவாதம் தருகிறது! மரண பயம், தூக்கமின்மை வீடே சிறைக் கூடமானது. உலகமே அஞ்சி நடுங்குகிறது. உயிர் பலியான எண்ணிக்கை உயர்வதை பார்த்து அகிலம் இரவு, பகல் உழைத்து உயிர் கொள்ளிக்கு மருந்து தேடி முயற்சிகள் எடுத்து வருகிறது. கருவின்றி தோன்றிய உருவான கொரனா மனிதனுக்கு காலனாய் உருவெடுத்தது! அறிகுறி இல்லாமலே குரல்வளையில் குடியேறி உயிர்பறிக்க துடிக்கிறதே. விலகி நின்றால் விரட்டலாம் என்று அரசு மருத்துவம் கூறுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் உற்சாகம் குன்றிய வாழ்க்கை உதவிக்கரம் நீட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு வீதிகளில் மனித நடமாட்டம் இல்லாமல் இது சாத்தியம் இல்லை! இதயம் சுயமாகவே தன்னை தானே ஆறுதல் கூறிக்கொள்கிறது. எத்தகைய சூழ்நிலையிலும் இல்லத்தை விட்டு கூட்டமாக கூடாதீர்கள் என்று அரசு உத்தரவு அவ்வப்பொழுது அச்சுறுத்திக் கொண்டே உள்ளது. ஊடகங்கள் மருத்துவர்களின் சேவையை படம்பிடித்துக் காட்டி மனவலிமையை உறுதிப்படுத்துகிறது. கூடவே 'நோய்' தொற்று அபாயத்தையும் எடுத்துரைத்து எச்சரிக்கையும் செய்கிறது. தீர்வுக்கு வழி என்ன? இதுவரையில் மருந்து கண்டுப்பிடிக்க இயலவில்லை ! என்கிறது உலக சுகாதார நிறுவனம்! கணவன், மனைவி அப்பா, அம்மா, தம்பி, தனையன், சித்தப்பா, சித்தி, நண்பர்கள், உற்றார், உறவு அத்தனையும் தனித்தனியாக பிரிந்துக் கிடக்கிறது. இது விதியின் விளையாட்டா! இயற்கை சதியின் சவாலா! நான் அறியேன் பராபரமே...! வீதிகளில் மனிதர்கள் நடமாட்டம், சாலைகள் தோறும் நடைப்பயணம் இல்லந்தோறும் வறுமை உத்தரவாதம் இல்லாத ஊழியர்கள் வேலை இழந்து பரிதவிக்கும் பரிதாப நிலையில் பசி, பட்டினி, பஞ்சம் அரசின் அறிவிப்பும் ஆறுதல் தரவாய்ப்பில்லை . பிழைக்க வந்த இடம் விட்டு, பிறந்த இடம் தேடும் பாட்டாளிகள், சுடு வெயில் சுட்டெரிந்தாலும் பட்டினி வாட்டினாலும் சொந்த ஊர் சென்றுவிடுவது சுகம் தரும் என்று தங்கள் வாழ்வாதாரத்தை துரந்து நடைப்பயணம் சாலை வழியில்! எத்தனையோ மரணங்கள் பலரது அழுகுரல்கள், ஆறுதல் கூறதேறுதல் சொல்ல யார் என்ற கேள்வி! அரசின் உதவி வந்து சேரவில்லை . ஒருபுறம் வந்து சேறும் என்ற நம்பிக்கைகள் இன்னொரு புறம் வாழ்க்கையின் சுகம் துக்கமாக மாறுகிறது! மூச்சுகாற்றும் சுடுகிறது. இல்லந்தோறும் இல்லாமை, முட்டல், மோதல் வலுக்கிறது. பள்ளி, கல்லூரி, தொழிற் கூடம் முடிக்கிடக்கிறது. அரசின் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கிறது. அலுவலகம் திறக்க அனுமதி வழங்கினாலும் ஊழியர்கள் வருவது எப்படி என்ற கேள்வி எழுகிறது. பொது போக்குவரத்து முடக்கம்! - சாமி