அதிரடி ரெய்டு மிரண்டு போன விசிட்!

அதிரடி ரெய்டு மிரண்டு போன விசிட்!


நடிகர் விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் ‘பிகில்' படத்தின் வசூல் குறித்து பலவிதமான தகவல்கள் ஆதரங்களுடன் மத்திய அரசின் வருவாய் துறைக்கு கிடைத்ததை அடுத்து வருமான வரிதுறை சோதனை நடிகர் விஜய் வீடு உள்பட தயாரிப்பாளர், சினிமா பைனான்சியர் என்று பல இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. இந்த சோதனைக்குப் பிறகு தனது சாதனையைப் பற்றி பேசுவதையே அரண்டு போய் அடக்கி வாசிக்கிறார் நடிகர் விஜய். திரைப்படத்தில் ஓங்கி ஒலித்த ‘பிகில்' நிஜ வாழ்க்கையில் திகிலாகிப் போனது. இதற்குப் பல காரணங்கள் கூறினாலும் ஒருவகையில் அரசியல் ரீதியான அச்சுறுத்தல் இருப்பதாக பல அரசியல் கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. ஆனால் நடிகர் விஜய்யோ அதிர்ந்து போய் உள்ளார். தனது எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாரோ, அதற்கு ஒரு பெரிய முட்டுக்கட்டை விழுந்துவிட்டதாகவே கருதுகிறார் நடிகர் விஜய். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நேர்க்காணலில் நடிகர் விஜய் அவர்களின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டியில் பல கேள்விக்களுக்கு மழுப்பலான பதில்களை கூறியுள்ளார். அதே நேரம் தன் மகன் அரசியலுக்கு வரமாட்டார் என்று அடித்துக் கூற மனமில்லாமல் நழுவல் பேட்டியை வழங்கியுள்ளார். விட்டதடி ஆசை விலாம்பழத்தோடு என்ற பழமொழிக் கேற்ப விஜய் மீது வருமான வரித்துறை நடத்திய சோதனையால் அரண்டு மிரண்டு போயி உள்ளார். பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக மாறிவிட்ட கதைப்போல் நடிகர் விஜய் வாழ்க்கையில் அரசியல் ஆசை ஆகிவிடுமோ என்ற நிலைக்கு அவரது ரசிகர்களால் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்கிறார்கள் கோடம்பாக்கம் ஸ்டியோ வட்டாரம்.