தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? (2021)

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? (2021)


தமிழ்நாட்டின் தற்போது பிரபலமாக பேசப்படும் வார்த்தை தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்பது தொலைக்காட்சி செய்திதாள்கள், தொலைக்காட்சி விவாதங்களிலும் செய்தித்தாள்களிலும், தினசரி முதல் வார இதழ்கள் வரை வெளியிடுகின்ற செய்திகளின் பெரும்பாலானவை அடுத்த முதல்வர் யார் என்பது குறித்தே அமைகிறது. தமிழ்நாட்டில் நேற்றுவரை ஊடகங்கள், செய்தித்தாள்கள், பொதுமக்கள் பத்தியில் பேசப்பட்டு வந்த செய்திகள் ஐந்தாண்டுகளுக்கு அதிமுக, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு திமுக. இப்படி மாற்றி மாற்றி இருகட்சிகளும் ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆளுங்கட்சி அந்தஸ்தைப் பெற்று சுமார் ஐம்பது ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை சுவைத்து இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை தலைகீழாக 2011 - 2016 2017 வரை, 2016 முதல் 2021 வரை உள்ள காலகட்டத்தில் தலைகீழாக மாறி உள்ளது. தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. தோழமை கட்சி ஆதரவுடன் சுமார் 110 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு திராவிட முன்னேற்ற கழகத்தால் தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்ற இயலவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு முதல்வராக பதவியேற்று கொண்ட எடப்பாடி பழனிசாமி அவர்கள் மிக குறைந்த எண்ணிக்கை ஆதரவுடன் ஆட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். இந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டின் உடைய நலன்களும், உரிமைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மத்திய அரசு வசம் சென்றுகொண்டிருக்கிறது. அதை தடுப்பதற்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் இயலவில்லை . எதிர் கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தாலும் மாநில நலனை பறிப்பதை தடுத்து நிறுத்த இயலவில்லை. பலமுறை அனைத்து கட்சி கூட்டம், பல போராட்டங்கள், ஊர்வலங்கள், பல்வேறு அறிக்கைகள் செய்தியாளர்கள் சந்திப்புகள் இப்படி பலவடிவங்களில் எதிர்கட்சிகள் போராடினாலும் திமுக தலைமையில் சட்டமன்றத்தில் முழுநேரமாக உள்ளிருந்து மக்கள் பிரச்சனைகளில் தங்கள் குரலை ஓங்கி ஒலிக்க முடியவில்லை. ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்தொடரிலிருந்தும் ஒரு பிரச்னையை முன்வைத்து தொடர்ந்தை வெளிநடப்பை மட்டுமே செய்து வருகிறது திமுக. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் தமிழர் அல்லாதவர்கள் மத்தியிலும் பேசப்படுகின்ற ஒரு விஷயமாக இருப்பது தமிழ்நாட்டின் அடுத்த “முதல்வர்” யார்? என்ற கேள்வி தான் பரவிவருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் கட்டாயம் முதல்வர் ஆவார் என்றும் அதிமுக திமுக இரு கட்சிகளில் இருந்தும் பேர் சொல்ல விரும்பாத பலர் அல்லது சிலர் ரஜினிகாந்த் ஆதரவாளர்களாக மாறுவர்கள் என்று பேசப்படுகிறது. இதற்கு ஏற்றார் போல் ஊடகங்கள் செய்தித்தாள்கள், சோசியல் மீடியாக்கள் அரசு அதிகாரிகள், டெல்லி வட்டார தகவல்கள் அன்றாடம் ரஜினிகாந்துக்கு ஆதரவாக மாற்றப்பட்டு வருகிறது. ஒருவேளை தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடியா, ஸ்டாலினா, ரஜினிகாந்தா என்று சோதனை ஓட்டமும், வாக்கெடுப்பும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இறுதி முடிவு மக்கள் கையில்.