பலன் தராத பேரணி!

பலன் தராத பேரணி!


தமிழகத்தின் திராவிட முன்னேற்ற கழகம் இழந்த தனது செல்வாக்கை உயர்த்தவும் சிறுபான்மை மக்கள் நம்பிக்கையும் முழுவதுமாக பெறுவதற்கு எடுக்கும் முயற்சியாக தான் குடியுரிமை மசோதாவை எதிர்த்து தோழமை கட்சிகள் ஆதரவுடன் பேரணி நடத்துகிறது. இந்த பேரணியால் எதிர்கால அரசியல் ஆட்சி அதிகாரத்தை திமுக கைப்பற்றுவதற்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் கைகொடுக்குமா என்றால் உறுதியாக சொல்ல இயலாது. காரணம் தேர்தலுக்கு தேர்தல் தங்கள் கட்சியின் நிலையின் சிறுபான்மை மக்களுக்காக இயக்கம் நடத்தும் இஸ்லாமிய அமைப்புகள் மாற்றிக் கொள்ளும் தன்மையில் இருப்பதால் ஒட்டுமொத்த வாக்கும் திமுக அணிக்கு வரும் என்று நம்பமுடியாது. ஆகவே இந்துக்கள் ஆதரவும் திமுக கூட்டணிக்கு முழு அளவில் ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழும். எனவே மக்கள் மன்றத்தில் முறையிடுவதை விட நாடாளுமன்றம் சட்டமன்றம் ஆகிய இரு அவைகளிலும் திராவிட முன்னேற்ற கழகம் தனது குரல்களை எழுப்புவதற்கு முன்வர வேண்டும். அது மட்டுமே வாக்குகளாக மாறும். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக குரல் எழுப்புவதும் பிறகு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதும் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக பேரணி நடத்துவதும், திமுக கூட்டணி கட்சிகளுக்கு நம்பிக்கையும், ஆதரவையும் தரலாம். அதே நேரத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு எந்தவித பலனையும் தராது என்பது நிச்சயம். மத்திய அரசின் கவத்தை ஈர்த்து குடியுரிமை மசோதாவில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்வது பயன்தரும்.