இது தான் அரசியல் ராஜதந்திரமா / மகாராஷ்டிராவில் 

இது தான் அரசியல் ராஜதந்திரமா / மகாராஷ்டிராவில் 


பிரதமர் மோடி, அமித்ஷா  ராஜதந்திரம், அரசியல் சாணக்கியத் தனம், மகாராஷ்டிரா  அரசியலில் நிருபனம் ஆகிவிட்டது. தோழமை கட்சி என்பதையும் தாண்டி எதிர்கட்சியான தேசியவாத கட்சியையும் சரிசெய்து பி.ஜே.பி ஆட்சியை  அமைத்து உள்ளார்கள். இத்தகைய முடிவு என்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்று அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் பார்வையாளர்களும் விமர்சனங்கள் செய்யலாம். அதே  நேரத்தில் அரசியலில் இப்படியும் ஒரு முடிவு எடுக்க முடியும் என்பதை  பாரதிய ஜனதா கட்சி நிருபித்துக் காட்டியுள்ளது.


 


சரத்பவாரை பொறுத்த வரை  தங்கள் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிளவாக கருதினாலும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய முன்று கட்சிகளின் முடிவுகளை  மாற்றி அமைக்க கூடிய அரசியல் ராஜதந்திரம் என்று கூட கூறலாம். இது பாரதிய ஜனதா எதிரான கட்சிகளுக்கு ஒரு பாடமாக கருதேவண்டுேம தவிர, வரலாற்று பிழையாக கருத முடியாது.


 


அரசியலில் வாய்ப்புகளை  பயன்படுத்துபவனே  சிறந்த அரசியல்வாதி. வாய்ப்பை  நழுவ விட்டுவிட்டு புிலம்புவதில் அர்த்தம் இல்லை . இனிவரும் காலங்களிலாவது எதிர்கட்சிகள் யோசித்து எடுக்கும் முடிவு தங்களுக்கு சாதகமாக அமைவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். கால தாமதம் கூட எதிரிக்கு வாய்ப்பை  கொண்டு சேர்த்துவிடும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். குதிரை போனப் பிறகு லாயத்தை  முடி என்ன பயன்.


 


/ சாமி